Paneer Kulcha Recipe In Tamil
Prep Time | 45 minutes |
Cook Time | 25 |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 3 கப் சுத்திகரிக்கப்பட்ட மாவு
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- தேக்கரண்டி வெண்ணெய்
- 1 கப் பால்
- உப்பு
- 200 கிராம் பன்னீர்
- 4 பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
- 2 கொத்தமல்லி இலை நறுக்கியது
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 2 தேக்கரண்டி சாட் மசாலா
- 1 வெங்காயம் நறுக்கியது
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும். அதன் பின்னர் இவை இரண்டையும் நன்கு கலக்கவும். இந்த மாவு கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
- இப்போது ஒரு பால் ஜாடி எடுத்து அதில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்க்கவும். அதன் பின்னர் அந்த கலவையை நன்றாக கலக்கவும்.
- இப்பொழுது, தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும்.
- அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவை ஒரு மென்மையான மெல்லிய ஈரத் துணி கொண்டு மூடி வைக்கவும். சுமார் 40 நிமிடங்கள் பொருத்திருக்கவும்.
- ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பன்னீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா போன்றவற்றை சேர்க்கவும்.
- அதன் பின்னர் அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.
- ஒரு உருண்டை மாவை எடுத்து ஒரு தடித்த வட்டுவாக தேய்க்க வேண்டும். வட்டத்தை மிகப் பெரியதாக செய்ய வேண்டாம்.
- இப்போது நீங்கள் தயாராக வைத்துள்ள ஸ்டப்பிங் பொருட்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.
- அதன் பின்னர் ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வடிவமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருட்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும்.
- இப்பொழுது தோசைக் கல்லில் குல்ச்சாவை வைத்து சுட வேண்டும்.
- அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிது வெண்ணெய் தடவ வேண்டும். இப்பொழுது உங்களின் பன்னீர் குல்ச்சா பறிமாறத் தயாராக உள்ளது.