Pongal Recipes
Rava Pongal Recipe in Tamil
Prep Time | 5 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் வெள்ளை/கோதுமை ரவை
- 1/2 கப் பாசி பருப்பு
- 4 மேசைக்கரண்டி நெய்
- கறிவேப்பிலை சிறிது
- 8 முந்திரி
- 1 இன்ச் இஞ்சி நறுக்கியது
- 2 பச்சை மிளகாய் நறுக்கியது
- 1 தேக்கரண்டி மிளகு
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப் பருப்பை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை போட்டு லேசாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீண்டும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, மிளகு, சீரகம் போட்டு, 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
- பின்னர் வறுத்து வைத்துள்ள சீரகம் மற்றும் மிளகை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கும் போது, வேக வைத்துள்ள பாசிப் பருப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க விட வேண்டும்.
- நீரானது ரவையிலிருந்து குறையும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
- பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, தீயை குறைவில் வைத்து கிளறி, 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- அதற்குள் ஒரு சிறு வாணலியில் நெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளித்து, மற்றொரு அடுப்பில் இருக்கும் ரவையில் ஊற்றி, கிளறி இறக்க வேண்டும்.
- இப்போது சுவையான ரவை பொங்கல் ரெடி!!!