Diwali Recipes
Traditional Jalebi Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் மைதா மாவு
- 1 துண்டு பட்டை
- 2 ஏலக்காய்
- சிறிது ரோஸ் வாட்டர்
- 1/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
- ஃபுட் கலர் சில துளிகள்
- 1 கப் சர்க்கரை
- எண்ணெய் பொரிக்க
Ingredients
|
|
Instructions
- மைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து தேவையான நீர் விட்டு (கெட்டியாகவோ, அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) கலந்து 4 மணி நேரம் வைக்கவும்.
- புளித்த பின் மாவின் பதத்தை சரிபார்க்கவும். பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.
- மாவு புளித்த பின் ஒரு கெட்சப் பாட்டிலில் ஊற்றியோ அல்லது ஒரு ஜிப் லாக் பேக்கில் ஊற்றியோ தயாராக வைக்கவும்.
- சுகர் சிரப் செய்ய ஒரு கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும்.
- ஒரு கம்பி பதம் வந்ததும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து வைக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும்.
- முக்கியமாக எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும்.
- அதிக சூடாக இருந்தாலோ, சூடு குறைவாக இருந்தாலோ ஜிலேபி ஜிலேபியாக வராது.
- இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் போடவும்.
- சிரப்பில் 5 நிமிடம் ஊறினால் போதும். மாலத்தீவு முறையில் செய்த ஜிலேபியா தயார்.