NON-VEG
Fish Pakoda Recipe In Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 25 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 500 கிராம் சிங்காரா மீன் அல்லது கெளுத்தி மீன்
- 5 மேசைக்கரண்டி கடலை மாவு
- 1 கப் கெட்டியான தயிர்
- 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1/2 பாட்டில் சோடா பானம்
- ஆரஞ்சு கலர் பொடி தேவைக்கேற்ப
- 2 லெமன்
- 4 மேசைக்கரண்டி எண்ணெய்
- 1 மேசைக்கரண்டி ஓமம் விதைகள்
- 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- 1 மேசைக்கரண்டி சாட் மசாலா
- உப்பு தேவைக்கேற்ப
Ingredients
|
|
Instructions
- ஒரு பெரிய பெளலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- நன்றாக கலந்த இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
- பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில் பேட்டர் தயாரிக்க வேண்டும் . பேட்டர் தயாரிக்கும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். சோடா பானம் தான் மீனின் மொறு மொறுப்பு தன்மைக்கு காரணம். இதற்கு பதில் நீங்கள் தண்ணீர் அல்லது பீர் கூட பயன்படுத்தலாம்.
- அப்புறம் மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை பேட்டரில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.
- இப்பொழுது பெளலில் ஒரு மூடி அல்லது கவர் போட்டு மூடி விட வேண்டும். இந்த கலவை நன்றாக கலக்கும் வரை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து பிரிட்ஜிலிருந்து எடுத்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இதை ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் எண்ணெய் அவ்வப்போது தெறிக்கும்.
- பிறகு தீயை குறைத்து மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.
- மீனை நன்றாக பொரியும் வண்ணம் திருப்பி திருப்பி விட்டு பொரிக்க வேண்டும்
- மீன்கள் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். இதை செய்வதற்கு 2 நிமிடங்கள் ஆகும்.
- இதே செய்முறையை மற்ற மீன் துண்டுகளுக்கும் செய்ய வேண்டும்.
- இறுதியில் பொரித்த மீன்களை ஒரு தட்டில் வைத்து சாட் மசாலா மற்றும் லெமன் துண்டுகள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.