Tamil Recipes
Chettinad Chicken Kurma Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1/2 கிலோ கோழிக்கறி
- 3 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 தேக்கரண்டி தனியா தூள்
- 1 தேக்கரண்டி சீரகத்தூள்
- 1 தேக்கரண்டி சோம்புதூள்
- 1 மூடி தேங்காய்
- 2 தேக்கரண்டி கசகசா
- 10 முந்திரி
- 1 கைப்பிடி பொட்டுக்கடலை
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- பட்டை சிறிது
- 3 கிராம்பு
- 2 அன்னாசிப்பூ
- 1/2 தேக்கரண்டி சோம்பு
- 5 காய்ந்த மிளகாய்
Ingredients
தாளிக்க:
|
|
Instructions
- கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
- தேங்காய், முந்திரி, கசகசா, பொட்டுக்கடலையை நைசாக அரைத்து வைக்கவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- மிளக்கயை இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.
- நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
- கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
- கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு வேக விடவும்.
- கோழிக்கறி முழுவதும் வெந்த பின் இறக்கவும்.