Recipes
Chettinad Chicken Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கிலோ கோழிக்கறி
- 1 பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- இஞ்சி சிறுதுண்டு
- 15 பல் பூண்டு
- கொத்தமல்லித் தழை சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 1/2 கப் எண்ணெய்
- 8 உலர்ந்த மிளகாய்
- 2 தேக்கரண்டி கசகசா
- 1 தேக்கரண்டி மல்லி
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 3 ஏலக்காய்
- 3 கிராம்பு
- பட்டை சிறு துண்டு
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1/2 துண்டு ஜாதிக்காய்
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
- 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
- உப்பு தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் பொடியாக நறுக்க வேண்டும்.
- ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு, பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- எஞ்சியுள்ள எண்ணெயை ஒரு வாணலியில் இட்டு சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.
- அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்க வேண்டும்.
- நன்கு வதக்கிய பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.
- அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும்.
- 2 கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.
- கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாற வேண்டும்.