Recipes
Pudalangai Kootu Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 20 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 கப் புடலங்காய்
- 1/4 கப் பாசி பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு
- 1 தேக்கரண்டி கடுகு
- 1 கொத்து கருவேப்பில்லை
- உப்பு தேவையான அளவு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 - 4 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல்
- 2 பச்சை மிளகாய்
- 1 வர மிளகாய்
- 1/2 தேக்கரண்டி ஜீரகம்
Ingredients
|
|
Instructions
- புடலங்காயை ஒரு ஸ்பூன் கொண்டு மேல் தோலை சொரண்டிவிடவும். பின் அதனை இரண்டாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை சுத்தமாக நீக்கி விடவும். சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- பாசி பருப்பை களைந்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 விசில் விட்டு எடுத்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
- துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரியவிடவும். கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் வர மிளகாய் கருவேப்பில்லை சேர்த்து அதனுடன் நறுக்கிய புடலங்காய் துண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- புடலங்காய் முக்கால் பாகம் வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள பாசி பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும். தேவைப் பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு 5 - 8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
- சூடான சுவையான புடலங்காய் சாதத்துடன் பரிமார தயார்!
Recipe Notes