General
Wheat Payasam Recipe In Tamil
Prep Time | 90 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கப் வெல்லம்
- 2 மேசைக்கரண்டி நெய்
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/2 பெளல் பால்
- 3 கப் தண்ணீர்
- 1 மேசைக்கரண்டி பாப்பி விதைகள்
- 1 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி
Ingredients
|
|
Instructions
- ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
- . ஒரு குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.
- விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.
- அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- அதே கடாயில், வெல்லத்தை சேருங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.
- வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.
- இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
- மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
- அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.
- தித்திக்கும் கோதி பாயாச ரெடி... 11. பாயாசத்தை வேறு பௌலிற்கு மாற்றி பின் பரிமாறலாம்.