Recipes
Gobi Manchurian Recipe in Tamil
Prep Time | 15 minutes |
Cook Time | 20 minutes |
Passive Time | 30 minutes |
Servings |
MetricUS Imperial
|
Ingredients
- 1 காலிபிளவர் பெரியது
- 1 மேசைக்கரண்டி சோயா சாஸ்
- 1 மேசைக்கரண்டி இஞ்சி விழுது
- 1/4 தேக்கரண்டி மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 1/4 கப் மைதா மாவு
- 4 கப் கான்பிளவர் மாவு
- எண்ணெய் தேவையான அளவு(பொரித்தெடுக்க)
Ingredients
|
|
Instructions
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து முழு காலிஃபிளவரை அதில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். காலிஃபிளவரை எடுத்து கீழே சற்று தடிமனாக உள்ள பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- மைதா மாவு, கான்பிளவர் மாவு, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.
- இஞ்சி விழுது மற்றும் சோயா சாஸை தண்ணீரில் கலக்கவும். அதில் கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
- அதில் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து கிளறவும்.
- பின் வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும், 5, 6 துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- காலிபிளவர் நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
- சுவையான மொறுமொறு கோபி மஞ்சுரியன் ரெசிபி தயார்.
Recipe Notes
அதிகமாக போட்டால் மொறுமொறுவென்று வராது, மேலும் சரியாக வேகாது.