Tamil Recipes
Badusha Recipe in Tamil
Prep Time | 10 minutes |
Cook Time | 45 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 2 மேசைக்கரண்டி நெய்
- 3 மேசைக்கரண்டி தயிர்
- 1/4 மேசைக்கரண்டி பேக்கிங் சோடா
- 1/4 மேசைக்கரண்டி உப்பு
- 1 கப் மைதா
- 1 1/4 கப் சர்க்கரை
- 1/4 தண்ணீர்
- 1/4 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி
Ingredients
|
|
Instructions
- ஒரு பெளலில் நெய்யை எடுத்து கொள்ளவும் தயிரை அதனுடன் சேர்க்கவும்
- அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும் நன்றாக கலக்கவும்
- அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும் கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்
- கொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும்
- பல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும்
- பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
- ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.
- அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.
- ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.
- பிறகு ஆற வைக்கவும் அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்
- உடனே தண்ணீர் ஊற்றவும் சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்
- பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்
- இப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- பிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும் சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.