Recipes
Nattu Koli Kulambu Recipe in Tamil
Prep Time | 20 minutes |
Cook Time | 30 minutes |
Servings |
people
MetricUS Imperial
|
Ingredients
- 1 கிலோ நாட்டுக்கோழி (துண்டுகளாக்கப்பட்டது)
- 3 வெங்காயம் (நறுக்கியது)
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 2 தக்காளி (நறுக்கியது)
- 2 டேபிள் ஸ்பூன் தயிர்
- 3-4 பச்சை மிளகாய் (நறுக்கியது)
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி
- 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
- 3 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- உப்பு தேவையான அளவு
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
- தண்ணீர் தேவையான அளவு
Ingredients
|
|
Instructions
- முதலில் மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் சிக்கன் துண்டுகளை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- அடுத்து தக்காளி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.
- 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
- சிக்கனானது நன்கு வெந்த பிறகு, அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி!!!
- நாட்டுக்கோழிக் குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வைத்து சாப்பிட்டாலும், பர்ஃபெக்ட் சைட்டிஷ் ஆக பக்காவாக இருக்கும். கண்டிப்பா சமைச்சு சாப்பிட்டு பாருங்க.!